குழந்தையின் பொம்மையென
பேசிக்கொண்டிருக்கிறோம்
புத்தகங்களைப்பற்றி
எங்கிட்ட
என் பேர் சிவப்பு இருக்கே
என் கிட்ட இலியட்டே இருக்கே
என்கிட்ட இரண்டாம்ஜாமங்களின்கதை
இருக்கு உன்ட்ட இல்லையே
செப்புச்சாமானைப்போல் அலமாரியில்
முழித்துக்கொண்டிருந்த புத்தகங்களை
அப்படியே விட்டு
அவரவர் வேலைக்குத் திரும்பினோம் பிறகு.
o
பிறழ்வென்கிறீர்கள்
பின்னிரவென்கிறீர்கள்
கண்ட இடத்தில் வார்த்தைகளைச்சேர்த்துப்
பிரிக்கிறீர்கள்
நாய்க்காமத்தைப்போல்
முத்தே றியப்பின்னிர வின்கூட்டுப்ப றவைக்க லமென
உங்கள் பைத்தியக்காரனத்தை வார்த்தைகளில்
இறக்கி வைத்துவிட்டுப்போய்விட
தூக்கிச்சுமப்பவன் திரிகிறான்
பைத்கியக்காரனென.
o
ஒரு கடலைக்
குவளைகளின் கோரும் சிறுவனின்
நம்பிக்கையுடன்
வாசிக்கிறேன்.
சில சமயம்
கடல் இனிக்கிறது.
o
34 வது புத்தககக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் ஜான்ஸ் பள்ளி மைதானத்தில். உங்களிடம் அது சார்பாக இரண்டு கோரிக்கைகள்.
1. இதுவரை படித்தவற்றில் சிறந்த 10 புத்தககங்களைச் பின்னூட்டத்தில் சொன்னால் நானும் வாங்க வசதியாக இருக்கும்.
2. வரும் சனி & ஞாயிறு மாலை 4 மணியிலிருந்து 9 வரை அங்குதான் சுற்றிக்கொண்டிருப்பேன். யாரவது வருவதாய் இருந்தால் சொல்லுங்கள். சந்திக்கலாம்.
ஜன 04, 2011 @ 13:12:48
ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன்:
1. என் பெயர் ராமசேஷன்(ஆதவன்)
2. காகித மலர்கள்(ஆதவன்)
3. ஆதவன் சிறுகதை தொகுப்பு
4. சொல் என்றொரு சொல்(ரமேஷ் பிரேம்)
5. யாமம்(ராமகிருஷ்ணன்)
6. ராஸலீலா(சாரு நிவேதிதா)
7. வெண்ணிற இரவுகள்(தாஸ்தாவெஸ்கி)
8. புனைவின் நிழல்(மனோஜ்)
9. மரம்(ஜி.முருகன்)
10. கடல்புரத்தில்(வண்ணநிலவன்)
ஜன 08, 2011 @ 21:38:32
தங்கள் பட்டியலில் மரம் & ஆதவன் சிறுகதைத் தொகுப்பு மட்டும் வாங்க வேண்டும். மற்றவை படித்துவிட்டேன். பட்டியலுக்கு நன்றி. 🙂
ஜன 08, 2011 @ 10:24:40
பூமியை வாசிக்கும் சிறுமி – சுகுமாரன் (உயிர்மை)
கல்யாண்ஜி கவிதைகள் – கல்யாண்ஜி (புதுமைப்பித்தன்)
சுந்தர ராமசாமி கவிதைகள் (காலச்சுவடு)
விக்ரமாதித்யன் கவிதைகள் (அமிர்தா)
கடைசி டைனோசர் – தேவதச்சன் (உயிர்மை)
அரைக்கணத்தின் புத்தகம் – சமயவேல் (உயிர்மை)
ஞானக்கூத்தன் கவிதைகள் (ஆழி)
கலாப்ரியா கவிதைகள் (சந்தியா)
ஆத்மாநாம் கவிதைகள் (காலச்சுவடு)
நகுலன் கவிதைகள் (காவ்யா)
ஜன 08, 2011 @ 21:37:02
நன்றி ஜெகதீசன். 10ல் 7 ஏற்கனவே இருக்கிறது. மிச்ச மூன்றையும் வாங்கிவிடுகிறேன்