71.
புகைப்படத்தில்
நகர்கிறது
நிழல்

72.
தரையிலிருந்து
விடுபடும்போது
கிளையை அடைவதில்லை
பழம்

73.
நதியோட்டத்தை
ஒளித்திருக்கிறது
அணை.

74.
எறும்பைத் தூக்கி
அலைகிறது
அரிசி

75.
தரையை
நகர்த்திக்கொண்டிருக்கிறது
மழலையின்
பாதம்

76.
அறையில் வழிந்து
கொண்டிருக்கிறது
மின்விசிறி

77.
வார்த்தைகளுக்குள்
ஒளிந்து
கொண்டிருக்கிறது
மெளனம்.

oOo