கருமை படர்ந்த இரவொன்றில்

எனக்குப் பிடித்ததாய் சொல்லி

விண்மீனொன்றை என் வானில் இட்டேன்

விண்மீனின் தவறுகள் சொன்னான்

அதைவிட அழகிய விண்மீன்களை

என் முன் எடுத்து வைத்தான்

இதை விண்மீனில்லை என்றான்

பழைய விண்மீன்களை மறந்ததாய்

கூண்டிலேற்றினான்

என் தரப்பு நியாயங்கள் சொன்னேன்

நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்த

நள்ளிரவுப் பொழுதொன்றில்

எதுவும் தெரியாமல்

தெரிய விரும்பாமல்

விண்மீனது

தனது வானில்

மூன்று முறை மின்னியது.

பறவைகள் சுதந்தரித்துக்கொள்கின்றன

வனத்தை மூடிய வானமொன்றை

தனது புதிய கூடென

வட்டங்களைப் பறவைகள்

மீறிப்போவதேயில்லை

தானியங்கள் தனிப்பட்ட

வானத்தின் கீழேயே கிடைத்துவிடுகின்றன

துணைகள்

வனத்திற்குள்ளேயே கிடைக்கின்றன

வேடர்களின் துன்பங்கள் இல்லை

வெருவூக்களின் கால்தடம் கிடையாது

இப்படி ஒரு கவிதைக்குள்

அவற்றை அடைக்கும்வரை.

பறவைகள் சுதந்தரித்துக்கொள்கின்றனவனத்தை மூடிய வானமொன்றை

தனது புதிய கூடென.

்!

நன்றி அதீதம்