பழைய இறகு அலைந்து

கொண்டிருக்கும் பாழடைந்த வீட்டில்

தனித்திருக்கிறேன்

நாசியில் அடையும்

வாசம் இதுவரை இல்லாத

பொய்களின் தோல்பாவைக்கூத்து

மரணக்கிணற்றின் வண்டியோட்டும்

லாவகம்

மூளை சிதறிக்கிடக்கிறது

தார்ச்சாலைகளில்

பெயர்பலகையில் இருக்கும்

இறகு புழங்கும் வீடு

என்பதை

வித்தியாசமாய் பார்ப்பவர்தானே நீங்கள்.

0

இனி

வாசலில் எப்போதும்

நின்றுகொண்டிருக்கும்

மரணங்களைப்பற்றித்

திடுக்கிட எதுவுமில்லை

சிதைந்த தலை

அல்லது

துண்டான உடல்கள்

அல்லது

பிணவறை நாற்றம்

அல்லது

மற்றும் பல

நாளிதழின் செய்திகளைப்போல

மரணங்கள் பழகிவிட்ட

நாளொன்றில்

இனி

மரணங்களைப்பற்றி திடுக்கிட

எதுவுமில்லை.