வெற்றுக்கையனாய் இருப்பதின்
பலன்களை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறேன்
மெளனம் அழகான மொழியென
யாரோ சொன்னார்கள்
போய்வா மகனே
என வழியனுப்பியவர்களிடம்
திரும்பி வரும் விருப்பமில்லை
என சொல்வதற்கு வாய்வருவதில்லை
எதிரொலிகளைத் தின்னும் வனம்
காத்திருக்கிறது
எங்கிருந்து எங்கு போவதென்பதுதான்
தற்போதைய குழப்பம்.

நன்றி : உயிரோசை