பிரதியெடுக்கும் பணியிலிருந்த நாளொன்றில
அவனைச் சந்தித்தேன்
காப்பிக்கோப்பைகளைக்
காலி செய்தோம்

தற்செயலென்ற பாவனையுடன் வரும்
தாழ்பார்வையை
இன்னும் எரிச்சலுடன்
சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டேன்

ஒருவரையொருவர்
தெரிந்து கொள்வதாகப் பேசத்தொடங்கி
வித்தியாசங்களை
உணர்ந்துகொண்டோம்

நீண்ட இரவின்
தொடர் அலைப்பேச்சில்
விதிமீறல்களை
கவனிக்காததுபோல் கடக்கத் தொடங்கினேன்

இதே காரணங்களாய்
காதல் நிராகரிக்கப்பட்ட முன்னாள்
நண்பர்கள் சங்கடப்புன்னகையுடன்
பத்திரிக்கைகளைப்
பெற்றுக்கொள்கிறார்கள்

இப்படித்தான் முளைவிடத்
தொடங்கவேண்டுமா
இந்த ஆயிரங்காலத்துப் பயிர்?

 நன்றி : ஆனந்த விகடன்