வெடித்துத் திறக்கும்
வெயிலேறிய பாறைகளில்
கால் விரித்துப் படுத்திருக்கிறாள்
சேனை

வழியும் வியர்வையின்
வாசனை
அருவருப்பின் ஆதிக்கு
இழுத்துச் செல்கிறது

உடலெங்கும் அலையும் கரங்கள்
நகத்தடங்களை விட்டுப்போகின்றன

குருதி கோடிட்ட உடல்கள்
மறைந்திருக்கும்
கேமராவில் தெளிவாக விழுந்திருப்பதை
பிறிதொரு நாள் பார்க்கும்போது

சேனை இறந்திருப்பாள்
என்றோ
கொன்றிருப்பாள் என்றோ பதில்களைக்
கொடுத்தார்கள்
இறந்திருப்பாள் என்பது கொஞ்சம்
நிம்மதியைத் தருகிறது

நன்றி: வல்லினம்