மிதக்கும் குரூரச் சித்திரவெளியில்
வண்ணக்கலவைகளுக்குள்
விளையாடிக்கொண்டிருக்கும் கிழவன்
கடைசி நாளைத்
தீட்டும்பொழுது
காகிதங்களைப் பறக்கவிடுகிறான்

லிங்கமடியிலிருக்கும்
தேவி சாவகாசமாய்
நகக்கண்களில் அழுக்கெடுத்து வீசுகிறாள்

இடம்பெயரும் வண்ணப்பறவைகள்
இறகுகளில் சுமந்தலைகின்றன
கருமைகளை
நன்றி : அதீதம்