உன்னைச் சந்தித்திருக்கிறேன்
நண்பனே
கடைத்தெருவில் யாருடனோ
ஐஸ்கிரீமை வாய்மாற்றிக்கொள்ளும்போது
அப்பா இறந்த நாளில்
அலைபேசியை
நோண்டிக்கொண்டிருந்தபோது
வைக்கோல்போருக்குத்
தீ வைத்துவிட்டு சுவரேறும்போது
தியேட்டர் நாற்காலியின்
இடுக்குவழியே கைகள் நீளும்போது

கடைசியாய் ஒரு நாள்
எனக்குப் பண உதவி தேவைப்படும்போது
உன்னைச் சந்திப்பதை நிறுத்திவிடலாம்
எனத் தோன்றியது.

நன்றி உயிரோசை