மடிசாய்ந்து அழத் தோன்றுகிறது
இன்றும்

எச்சில் முழுங்கும் குரலுடன்
ஒரு வரலாற்றை அதன் பொய்களுடன்
சேர்த்தே சொல்லவேண்டும்

சாம்பலை அள்ளி
முத்தமிட்டு கசக்க
துடைத்துக்கொள்ளும் காலத்தில்

யாருமற்ற கடற்கரையில்
நின்று எதிரொலிக்கக் கத்தவேண்டும்
அந்த பெயரை

கொளுத்திவிட்டு
திரும்பும் பாதையில்
கனத்த இதயத்தில் தோன்றுகிறது
இப்படியெல்லாம் கூட.

நன்றி – வல்லினம்