நான் குற்றால‌
அருவியை
வாயில் வைத்து
சுற்றிக் கொண்டிருக்கிறேன்

நீ நயாகராவையே கண்ணில்
வைத்திருக்கிறாய்.

போதும் நிப்பாட்டிக்குவோம்.

0

ஒரு ம‌ணி நேர‌ம்
வ‌ள‌வ‌ள‌வென‌ பேசிவிட்டு
திரும்பி
‘புரிஞ்சுதா எரும‌ மாடே’
என்ப‌துபோல் பார்க்கிறாய்

பேசிக்கொண்டிருக்கும்போது
ந‌டுவில்
காய‌த்ரி என்றாயே..
அவ‌ள் அலைபேசி எண் என்ன‌?

0
நானெல்லாம்
நீயாகிவிடுகிற‌து
நீயெல்லாம்
நானாகிவிடுகிற‌து

எடுத்த‌ இட‌த்தில்
பொருளைவைக்காம‌ல்
க‌ண்ட‌ இட‌த்தில் ப‌ர‌த்திப்போடும்
குழ‌ந்தை போலாகிவிட்ட‌து
ம‌ன‌து.

முதுகில் நாலு போட்டால்தான்
ச‌ரியாவ‌ரும்.
0

என் பாதையில்
நேராக‌ போய்க்கொண்டிருக்கும்
ம‌ழை நான்

குறுக்கே நெடுக்கே
புகுந்து குழ‌ப்பும்
காற்று நீ

கொஞ்ச‌ம் நிம்ம‌தியாய்
என்னை விட்டால்தான்
என்னாவாம்?
0

செல்ல‌க்கோப‌ங்க‌ளில்
என்னை இம்சிக்கிறாய்

நிஜ‌கோப‌ம் வ‌ந்தால்
கையில் கிடைத்தையெல்லாம்
வைத்து துவ‌ம்சிக்கிறாய்

எல்லாவ‌ற்றையும்
க‌விதையாக்கிவிடுகிறேன்

ஒரு ம‌னுஷ‌ன் எவ்வ‌ள‌வுதான்
அடிதாங்குவான் என‌
வேறெப்ப‌டித்தான்
க‌ண‌க்கு வைத்துக் கொள்வ‌து.

0

This e-mail and any files transmitted with it are for the sole use of the intended recipient(s) and may contain confidential and privileged information. If you are not the intended recipient(s), please reply to the sender and destroy all copies of the original message. Any unauthorized review, use, disclosure, dissemination, forwarding, printing or copying of this email, and/or any action taken in reliance on the contents of this e-mail is strictly prohibited and may be unlawful.