எல்லா ரகசியங்களையும் உடைத்த‌
ஒரு அஸ்தமனத்தில்
என்னை நீ நிராகரித்தாய்

இனி ஒரு போதும் பார்க்கப்போவதில்லை
என்பது உன் முடிவாக இருந்தது

நினைவுகள் கொலையா செய்யும்
என்றொரு திமிர் இருந்தது

எத்தனை முறை
நன்றி சொல்லிப் பிரிந்திருப்போம்
மீண்டும் சந்தித்துக்கொள்ளலாம்
என்றொரு நம்பிக்கை இருந்தது

புன்னகையில்
பனிக்குடம் உடைந்து மீண்டும்
மொட்டு மலரும்
என்றொரு கற்பனை இருந்தது

எல்லாவ‌ற்றையும் ஏறி மிதித்து
ஒரு சூரிய‌ அஸ்த‌ம‌ன‌த்தில் நீ
என்னை நிராக‌ரித்த‌பின்

இற‌ந்த‌ கால‌ம் இற‌ந்த‌கால‌மாக‌வே
இருக்கிற‌து