நீண்ட இரவின் நுனியிலிருந்து
தவறி நினைவிற்குள் விழுகிறேன்
சிரித்தபடி குதிக்கும் கனவானென.

சில வார்த்தைகளை பகிர விரும்பாமல்
போதை உச்சத்தில் ஒரு முறை
முகம் கழுவிக்கொள்கிறேன்
கண்ணீர் தெரியாமல் போகக்கடவது

ஆத்மாநாமின் கிணற்றில்
ககனப்பறவை அலகின் பிம்பம்.

சாபத்தை உமிழ்பவனைப்
பேசவிடுகிறேன்
ஆற்றுப்படுத்திக்கொள்ளவும்.

நீண்ட பனி நோக்கிச் சென்ற
அந்த சாக்லேட் சுவை சிகார்
மறைந்துதான் ஆகவேண்டும் இல்லையா?