பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.

-நீதிமொழிகள் 10:12

யூ ஆர் லாஸ்ட் வேர்ட் ஃப்ரீக்
என்றாள்

ஆரம்பங்களை
வேறு யாரோதான்
ஏற்படுத்துகிறார்கள்

என்ற ஆசுவாசம்தான் காரணம் என்றேன்

ஆதியில் அதுவே இறுதி
வார்த்தையாக இருந்தது.

o

ஒரு கத்தியை
முதுகில் தடம் பதிக்கிறார்கள்
அன்புடையீர்களில் ஒருவன்
பிரிந்து செல்கிறான்

புண்ணைச் சுற்றி அரிக்கிறது
வண்ணத்துப்பூச்சி அறைக்குள் மாட்டிக்கொள்கிறது

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

o
திரையரங்கின் எதிர்பாராத இருளுக்கு
கூக்குரலிடத் துடிக்கும்
ஆழ்மனக்கூவல்
க‌ண் மட்டும் திருப்பி
பைத்திய‌க்காரியின் அங்க‌ங்க‌ளை
அள‌வெடுக்கும்
இச்சைத் தீக்க‌ன‌ல்

வ‌ன்கொடுமைக‌ளை நினைத்து

சுயஇன்ப‌ம்செய்யும்
புன‌ல் காடு
பெரும்பாலும்

கொலைக‌ளுக்குச் சாட்சியாக‌ இருக்கிறோம்
அல்ல‌து
கார‌ண‌மாக‌ இருக்கிறோம்
ப‌ர‌ம‌பிதாவே.

oOo