இந்தக் கனவை
அதன் ஒவ்வொரு வண்ணத்தோடும் தேரியின் மூலையில்
புதைத்து ஒரு செடி நடவேண்டும்

அந்தப்பெண்ணின் பிம்பத்தை
முழுவதுமாய் அழித்துவிடத் தூண்டும்
ஒரு நண்பனை
இறுக அணைத்து முத்தமிடவேண்டும்

ஒற்றைப்புள்ளியில் சுற்றிக்கொண்டிருக்கும்
நூறு கவிதைகளை
தாள் இறக்கி எரிக்க வேண்டும்
ஒருவரி எழுதவேண்டும்
எல்லாவற்றிற்குமாய்ச் சேர்த்து

இந்தக்
காரணங்களற்ற மொழியை
காரணங்களற்ற வாதையை
காரணமற்ற ஒரு பிறவியை
கடைசியாய் அறுக்க வேண்டும்
செதில் செதிலாக
செதில் செதிலாக
0