எதையும் கவிதை வடிவில் எழுதும் மனநிலை இன்று இல்லை. இந்தத் தொகுப்பிற்காக தேடும்பொழுதுதான், இந்த மனநிலை 2012லியே தொடங்கியிருப்பதை அறிய முடிகிறது. ஒருவேளை இது என் கடைசி தொகுப்பாக இருக்கலாம். அல்லது அடுத்த 20 கவிதைகளைச் சேர்ப்பதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். இதற்கிடையான வேறுபாடென்பது, கவிதை என்பதன் மீதான பயமும் பார்வையும் முற்றுமாக மாறியிருப்பதாகக் கொள்ளலாம் அல்லது போலச்செய்தல்களின் சலிப்பு ஒரு கூர்வாசகனாக என் கவிதைகளை திருப்பிப்பார்க்கும் மன நிலை வாய்த்திருக்கிறது என்றும் கொள்ளலாம்.

இது மறுபடி ஒரு சேமிப்பன்றி வேறில்லை. சில மின்னூல்களின் வழியாக நம் சிறுவயது  நாட்குறிப்புகள் மீளக்கிடைப்பதன் சுகம் இந்த மாதிரி தொகுத்து பதிவிட்டு அதை நான் மட்டும் தரவிறக்கி பத்திரமாய் வைத்திருப்பதில் இருக்கத்தான் செய்கிறது. போலவே கவிதைத்தொகுப்பென்ற பெயரில் வரும் எல்லாவற்றையும் வாசிக்கும் அதே இருபத்துசொச்ச பேர் முந்தைய என்னிரண்டு தொகுப்புகளுக்கு கொடுத்த ஊக்கங்களையும் மறந்துவிடக்கூடாதில்லையா.

ஒரு வேளை எப்பொழுதுவாது, எதாவது ஒரு தருணத்தில் எதையாவது சொல்ல விரும்பும்போது சொல்லிவைக்கிறேன். அதுவரை நன்றி.

தொகுப்பை தரவிறக்க அல்லது பகிர இந்த சுட்டிகளை உபயோகிக்கலாம் PDF | Flash

m